திருச்சி பாலக்கரை நடுநெய்க்கார தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 29). இவரும், சென்னை பூந்தமல்லி வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்திரன் என்பவரும் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். வாசுகி திருமணத்தின்போது 27 பவுன் நகைகளும், சீர்வரிசை பொருட்களும், 2 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.25 லட்சம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் தன்னை சித்ரவதை செய்வதாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். புகாரின்பேரில், கணவர் பவித்ரன், மாமியார் சுஜாதா, மாமனார் சிவக்குமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.