Rock Fort Times
Online News

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற 5 பேர் விஷ வாயு தாக்கி பலி….!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷ வாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  நாசிக் மாவட்டம் வக்கடி கிராமத்தில்  ஒரு பூனை கிணற்றில் விழுந்ததைப் பார்த்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பூனையை மீட்க அடுத்தடுத்து கிணற்றில் குதித்துள்ளனர்.  இதில், அவர்கள் 5 பேரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கிணற்றுக்குள் இறங்கி 5 பேரையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.  பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்