பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், FL2 முதல் FL 11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்து கடைகளும் வருகிற 17.04.2024 காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குபதிவு நாள்) இரவு 12 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 21.04.2024 மகாவீர் ஜெயந்தி மற்றும் 1.05.2024 மே தினம் ஆகிய இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.