Rock Fort Times
Online News

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 48 விரைவு ரயில்கள் நின்று செல்லும் ! தைப்பூசத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மிக முக்கியமான பண்டிகையான தைப்பூசத்தை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 48 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இயக்கப்படும் மலைகோட்டை விரைவு ரயில், சென்னை எழும்பூர்-மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர்- செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் (12661), சென்னை எழும்பூர் – மன்னார்குடிக்கு இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179), தாம்பரம் – நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20691), சென்னை எழும்பூர் – கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ( 16101), சென்னை எழும்பூர் – தஞ்சாவூருக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865), பனாரஸ் – ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (22536), புவனேஸ்வர் – ராமேஸ்வரத்துகு இயக்கப்படும் விரைவு ரயில் (20896), லோக்மான்ய திலக் டெர்மினஸ் – மதுரைக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (22101), எழும்பூர் – நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12667) உட்பட 23 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.இதேபோல், மறுமார்க்கமாக 25 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் இனத்திற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்