இருளில் மூழ்கிய பெரம்பலூர் – துறையூர் நெடுஞ்சாலை! வெளிச்சமில்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமாள் மலை அடிவாரம். துறையூர் – பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சாலைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை என பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் இதே போல். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில்விபத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மின் விளக்குகளை பழுது நீக்கி இரவு நேரங்களில் ஒளிரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமாள் மலை அடிவாரம். துறையூர் – பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சாலைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை என பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் இதே போல். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில்விபத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மின் விளக்குகளை பழுது நீக்கி இரவு நேரங்களில் ஒளிரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments are closed.