புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டையை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் (50). இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது பிறந்த தேதி, ஊர் மற்றும் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதேபோல தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை சேர்ந்த வெள்ளையம்மாள் (43) சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் ஏர்போர்ட் போலீசில் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், போலி பாஸ்போர்ட் மூலம் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த சிவகங்கை மாவட்டம், காரைக் குடியை சேர்ந்த திருநாவுக்கரசு (53 ), ராமநாதபுரம் சித்தர் கோட்டையை சேர்ந்த அகமது மொய்தீன் (50) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
Comments are closed.