Rock Fort Times
Online News

திருச்சி அருகே செல்போன் டவரில் பேட்டரி திருட முயன்ற 4 பேர் கைது…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 2 செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த 2 டவரிலும் விலை மதிப்பு மிக்க 6 பேட்டரிகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடுவதற்காக சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேட்டரிகளை திருட முயன்றனர். அப்போது அதிலிருந்த அபாயமணி தனியார் செல்போன் டவர் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து செல்போன் டவர் நிர்வாகிகள் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், திருச்சி-சென்னை தேசிய நெடுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தார். சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி, முதல்நிலை காவலர் மணிகண்டன், காவலர்கள் ரமேஷ், பிரேம் ஆனந்த் உள்ளிட்ட போலீசாரும் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் பிரிவு சாலையில் நின்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த மணிகண்டன்(34), அதே பகுதியைச் சேர்ந்த சசி(29), கருப்பாயி(34), தமிழரசி(34) என்பதும் அவர்கள்தான் செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருட முயன்றதும் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் பல்வேறு இடங்களில் பேட்டரிகளை குறிவைத்து திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. பேட்டரிகளை திருட முயன்று தப்பியோடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செல்போன் டவர்களில் ஏற்கனவே 6 முறை பேட்டரிகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்