திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் தாராநல்லூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக திருச்சி தென்னூர் ரயில்வேகேட் பகுதியை சேர்ந்த பிரவீன்காந்த் (வயது 22 ), தெற்கு தாராநல்லூரை சேர்ந்த பரத்குமார் (20). மேல சிந்தாமணியை சேர்ந்த விக்னேஸ்வரன் (19) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, திருச்சி காந்தி மார்க்கெட் கீரைக் கடைபஜார் பகுதியில் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூரை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.