சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரகடம் நோக்கி வந்த மினி லோடு வேன் போலீசாரை கண்டு நிற்காமல் சென்றதால் போலீசாா் அந்த வேனை மடக்கி சோதனை நடத்தினா். இதில் 60 மூட்டைகளில் சுமார் 3000 கிலோ ரேஷன் அரிசிகள் கடத்தி வரப்பட்டது தொியவந்தது. கடத்தி வரப்பட்ட ரேசன் அாிசி மூட்டைகள் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ஸ்ரீபெரும்புதூர்,ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. பின்னர் மினி லோடு வேனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஒளி முகமது பேட்டை பகுதியை சேர்ந்த அசேன்ரசாக் , சாகுல் ஹமீது ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.