Rock Fort Times
Online News

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு….

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரை சேர்ந்தவர் சேகர் ( வயது 53 ). இவர், மாடுகளை வைத்து பால் கறந்து வீடு, வீடாக விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 சீமை கறவை மாடுகளும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஒரு கறவைமாடும் அங்குள்ள ஒரு வயலில் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அப்பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மின்கம்பிகள் அறுந்து வயலில் விழுந்தன. அந்த மின் கம்பிகளை 3 மாடுகளும் மிதித்து விட்டன. அதனால் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்த தகவலின் பேரில், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், அப்பகுதியில் மின் வினியோகம் செய்யப்பட்டது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாடுகளை உரிமையாளர்கள் தூக்கிச் சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்