Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27ம் ஆண்டு விழா ! ( புகைப்படங்கள் இணைப்பு )

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ சரவணபவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இங்கு எல்கேஜி-ல் இருந்து 12-ஆம் வகுப்பு வரை சுமார் 800-க்கும் அதிகமான மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் 27 வது ஆண்டு விழா நேற்று ( பிப்ரவரி 8ம் தேதி ) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான எஸ்.ராஜ்மோகன் கலந்து கொண்டார்.பள்ளியின் தாளாளர் இன்ஜினியர் எஸ். சரவணன், முதல்வர் அனிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஏ.அருள்ராஜ் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.இதில் பள்ளி மாணவ – மாணவிகளின் நடனம், இசை, யோகா, சிலம்பம் போன்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பிரிவிலும் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண்களுக்கான பட்டமளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.முடிவில் பள்ளி ஆசிரியர் பி.பெரியண்ணன் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்