Rock Fort Times
Online News

திருச்சியில் தங்கி உள்ள பிரபல ரவுடிக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!

திருச்சி குண்டூர் பர்மா காலனியில் தங்கியுள்ள மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி (37).

சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8 கொலை, 7 கொலை முயற்சி, 30 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் இருந்த இவருக்கு 15 நாட்கள் பரோல் கிடைத்தது.

இதையடுத்து அவர் திருச்சி குண்டூர் பர்மா காலனியில் உள்ள தனது சகோதரி சத்யஜோதி வீட்டில் தங்கியுள்ளார்.
அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால், டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் உள்ளிட்ட 25 துப்பாக்கி ஏந்திய போலீஸார், வீட்டைச் சுற்றி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தங்களது பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்