ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை: பதை, பதைக்க வைக்கும் வீடியோ (இணைப்பு)
ஆழ்துளை கிணற்றில் சிறுவர், சிறுமிகள் அடிக்கடி தவறி விழும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதில் சில குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் உயிரிழந்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதனால், பதறி துடித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தை தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே நவீன எந்திரங்கள் மூலம் ராட்சத குழிகள் தோண்டப்பட்டு கயிறு கட்டி குழந்தையை மீட்கும் பணி இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. அந்தக் குழந்தை சுமார் 35 அடி ஆழத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து களத்தில் இறங்கி உள்ளது. குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
Comments are closed.