Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய வழக்கில் வனச்சரகர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். விவசாயி. கடந்த 2005-ம் ஆண்டு இவரது மாமா முத்து என்பவர் தேக்கு மரத்தினை வெட்டிய குற்றத்திற்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுவதாக அப்போதைய மணப்பாறை வனச்சரகத்தில் பணிபுரிந்த வனச்சரகர் ஜானகிராமன் என்பவரும், வன காவலர் ராமலிங்கம் என்பவரும் கூறியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரப்பன் தனது மாமா முத்துவிடம் லஞ்சம் கேட்ட வனச்சரகர் ஜானகிராமன் மற்றும் வனகாவலர் ராமலிங்கம் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில், வனச்சரகர் ஜானகிராமன் மற்றும் ராமலிங்கத்திடம் வீரப்பன் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். ஜானகிராமன் மற்றும் ராமலிங்கம் மீதான லஞ்ச வழக்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று (28.03.2024) தீர்ப்பளிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் வனச்சரகர் ஜானகிராமன், வன காவலர் ராமலிங்கம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 20,000 ரூபாய் அபராதமும், அபராதம் சுட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறைதண்டனையும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்