Rock Fort Times
Online News

திருச்சியில் ஹோட்டல் அதிபர் வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டு – மர்ம நபர்களுக்கு வலை…!

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி முதலியார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் விக்கிரம ராஜா (வயது 46). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்று இருந்தார். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 6 பவுன் நெக்லஸ் ஒன்று, இரண்டு பவுன் நெக்லஸ், இரண்டு பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் பிரேசிலெட், 2 சவரன் தங்கச் செயின் ,ஒரு பவுன் தங்க டாலர், 29 கிராமில் கம்மல் பத்து செட்டு ,10 கிராமில் தங்க மோதிரங்கள் நான்கு என 19 பவுன் நகைகள் திருட்டுப் போய் இருந்தன. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் விக்கிரம ராஜா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்