திருச்சி, சீனிவாச நகரில் 17 பவுன் நகைகள் கொள்ளை… * வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்சி, சீனிவாச நகர் 7-வது மெயின் ரோடு, 6-வது கிராஸை சேர்ந்தவர் வெங்கடேசன் (63). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 17.5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். வெளியில் சென்று இருந்த வெங்கடேசன், வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பூஜை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 17.5 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகாரளித்தார். புகாரின்பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் சீனிவாச நகர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

Comments are closed.