Rock Fort Times
Online News

மதுரையில் துணிகரம்: டாக்டர் வீட்டில் 167 பவுன் நகை கொள்ளை..!!

மதுரையில் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் நாராயணன் வீட்டில் 167 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் எல்லீஸ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதில் டாக்டர். நாராயணனின் வாகன டிரைவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பேரில், டாக்டரின் வாகன டிரைவர் ஜெயராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்