Rock Fort Times
Online News

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை….

ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பிரியன் ரோஸ், ஜார்ஜ், அந்தோணி, பிரதீபன், ஈஷாக், ஜான், ஜனகர், கிறிஸ்து, ஆரோக்கியராஜ் , ஜெர்மஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன் ஆகிய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு 2 விசைப்படகுகளையும்  பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் 15 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், ஆகஸ்ட் மாதம் 4-ல் படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்