எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளையொட்டி வருகிற 17ம் தேதி அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கழக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,எடப்பாடி. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்ககழக நிறுவன தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா வரும் ஜனவரி 17 புதன்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது.அன்று காலை 10.00 மணியளவில், திருச்சி கண்டோன்மெண்ட் நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அண்ணாரது திருவுருவ சிலைக்கு, திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட,பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் வைத்து மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.