Rock Fort Times
Online News

“ஸ்டீம் பாத்”எடுத்த பெண்ணின் 10 பவுன் நகைகள், பணம் திருட்டு…

போலீசார் விசாரணை...

திருச்சி உறையூர் மருதாண்ட குறிச்சி குழுமணி மெயின் ரோடு மங்களம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ரமா ரேவதி (வயது 35). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள பெண்கள் பிட்னஸ் மையத்தில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தார். ஸ்டீம் பாத் எடுத்து முடித்து விட்டு வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த நகைகளையும், பணத்தையும் காணவில்லை. இதுகுறித்து தில்லை நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்