திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்பு- காப்பகத்தில் ஒப்படைப்பு…!
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் போலீஸார், ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆதரவற்ற நிலையில் 9 முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றிய ஒருவர் பிரதான நுழைவாயில் பகுதியில் சுற்றித் திரிவதை பார்த்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் லக்ஷ்மையா (வயது 50), கிளி ( 85), .சுரேஷ், ( 51), பொன்னையா( 68), எஸ்.குமார் ( 73 ), செல்வகுமார்(41), தனம்( 60), செல்லம்மாள்(60), அலமேலு(85 ), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌகர்(23 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரும் மீட்கப் பட்டு, திருச்சி ஸ்ரீ அறக்கட்டளை முதியோர் இல்லம் மற்றும் மன நோயாளிகள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை அடித்து விரட்டாமல் மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு காப்பகத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.