Rock Fort Times
Online News

தமிழக உயர்கல்வித்துறை செயலர் உள்பட 10 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம்…

தமிழக தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்.நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ( 01.07.2023 ) அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் சில மாற்றங்களை செய்து அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத்துறை மற்றும் மீன்வர் நலத்துறை செயலாளர் கார்த்திக், உயர்கல்வித்துறை செயலாளராகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா, கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளர் ரீடா ஹரீஸ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராகவும், சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் டான்ஜெட்கோவின் இணை மேலாண் இயக்குநராகவும், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஏ.அண்ணாதுரையும், தமிழக சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக எஸ்.பிரபாகரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இளம் பகவத், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும், கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையனுக்கு கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு அலுவலர் பொறுப்பு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்