Rock Fort Times
Online News

சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை Z பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கங்குலிக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை ( 16.05.2023 ) முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கங்குலியின் பாதுகாப்பு காலாவதியானதால், நெறிமுறையின்படி மறுஆய்வு செய்யப்பட்டது. மேலும் கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்