இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒருபகுதியாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பில் 3 நாட்கள் ட்ரோன் பைலட்டிற்கான பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. செ.னையில் வருகிற மார்ச் 18 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில், ட்ரோன் இயக்க விதிமுறைகள், தொழில்நுட்ப அறிமுகம், ட்ரோன் ஒழிப்பதிவு நுட்பங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் உள்பட பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சிகள் கற்றுத்தரப்பட உள்ளது.இப்பயிற்சி வகுப்பின் போது அரசு வழங்கும் உதவித்திட்டங்கள், மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும் என தெரிகிறது.பத்தாம் வகுப்பு முடித்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை பெற விரும்புவோர் https://www.editn.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க அலுவலக செல்போன் எண்களான 86681 08141, 86681 02600, 70101 43022 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ADVERTISEMENT…👇

Comments are closed.