Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து கொச்சிக்கு ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்…* மே 7-ம் தேதி முதல் மீண்டும் சேவை தொடக்கம்!

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. திருச்சி -கொச்சி இடையிலான விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், 2018-ம் ஆண்டு திருச்சியில் இருந்து துவங்கியது. ஆனால், பல்வேறு சிக்கல்கள் மற்றும் நிர்வாக காரணங்களால் சில மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை த்தொடர்ந்து, மே 7 முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி – கொச்சி இடையே தினசரி விமான சேவையை துவங்க உள்ளது. திருச்சியில் இருந்து தினமும் பகல் 12 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 1 மணிக்கு கொச்சி சென்றடையும். கொச்சியில் இருந்து மதியம் 1-40க்கு புறப்படும் விமானம், மதியம் 2-40 மணிக்கு திருச்சி வந்தடையும். இதற்கான விமான கட்டணம் 4,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது. மேலும், விவரங்களை airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்