திருச்சியிலிருந்து சென்னைக்கு பிசினஸ் கிளாஸில் பறக்கலாம்!- நாளை (மார்ச் -22) முதல் சேவையை தொடங்குகிறது ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்!
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் இண்டிகோ விமான நிறுவனம் மட்டுமே விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வார விடுமுறை நாட்கள், சுப முகூர்த்தம் போன்ற விசேஷ நாட்களில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வது வழக்கம். எனவே திருச்சி – சென்னை மார்க்கத்தில் கூடுதல் விமான சேவைகள் வழங்க வேண்டும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பூர்த்தி செய்யும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை – திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை ( மார்ச் 22ம் தேதி )முதல் தொடங்குகிறது. அதன்படி, சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7.45 மணிக்கு திருச்சியை வந்தடையும். மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து இரவு 8.15க்கு புறப்படும் விமானம் இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும். இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.