திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல். இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பெரம்பலூரில் இருந்து பேருந்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது துறையூரில் இருந்து ஆலத்துடையான்பட்டி செல்ல அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டமாக இருந்ததால் வடிவேல் பின் படி படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளாா். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்துப் பேசும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வடிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேருந்து நடத்துனர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பயணி இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.