திருச்சியில் டிஆர்இயூ, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் கருப்பு பேட்ச் அணிந்து பணி போராட்டம் நடத்திவருகின்றனா்.
ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வருவாய் நிலை காட்டவில்லை என்று கூறி டிரான்ஸ்பர் செய்வது, ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகப்படியான வருமானம் காட்டவில்லை என்று கூறி 11 டிக்கெட் பரிசோதகர்களுக்கு உடனடி உத்தரவு மூலம் நடவடிக்கை எடுத்தது, குறைவாக வருமானம் காட்டியவர் என 44 டிக்கெட் பரிசோதனைகளின் ஏப்ரல் மாத போக்குவரத்து படிக்காக உதவி வணிக மேலாளரை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது, அதிக வருமானம் காட்டவில்லை என்பதற்காக ஒருவரை டிக்கெட் செக்கிங் போஸ்ட் இல்லாத அகத்தியம் பணிக்கு மாற்றியது போன்ற திருச்சி கோட்ட கமர்சியல் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயூ, சிஐடியூ தொழிற்சங்க ஸ்லீப்பர், டெப்போ சூப்பர்வைஸர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் இன்று முதல் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.