Rock Fort Times
Online News

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கோடை திருநாள் தொடக்கம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் இன்று ( 17.05.2023 ) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இன்று (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெறும். இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.
அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறும். அப்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ,மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார். 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்