Rock Fort Times
Online News

த.வெ.க.சார்பில் மகளிர் தின விழா: இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா உள்ளிட்ட பெண் சாதனையாளர்களை கெளரவித்த விஜய்…!

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாளை (08-03-2026) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-2026) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்த விழாவின்போது இஸ்ரோ பெண் விஞ்ஞானி கல்பனா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து, கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார். தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்