தமிழகத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒரு சிலர் காய்ச்சலால் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த ராஜசுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி ( வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.