சென்னையிலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டை நோக்கி நேற்று ( 14.10.2023 ) பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திருச்சி திருவானைக்காவல் அருகே நள்ளிரவு 1-30 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்த பெண் மீது ரயில் மோதியது. இதில் அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அந்த ரயிலின் டிரைவர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித் திரிந்ததும், தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. அவரைப் பற்றிய முழு விவரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.