திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புலிவலம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. ஏ.சி.மெக்கானிக். இவருடைய மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யா அருகே உள்ள பெரியசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தீயணைப்புத் துறையினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி திவ்யாவை மேலே தூக்கி வந்தனர்.

பின்னர் புலிவலம் போலீசார், திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திவ்யா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.