Rock Fort Times
Online News

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம்…

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவால் நேற்று ( 19.10.2023 ) காலமானார். அவருக்கு வயது 82. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை பங்காரு அடிகளாரின் உடலுக்கு 42 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சித்தர் முறைப்படி பங்காரு அடிகளாரின் உடல் கோவில் வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்