கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பு செயலாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம்…!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று( செப்.5) செய்தியாளர்கள் சந்திப்பின்போது கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும், இல்லையென்றால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று கூறினார். அவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 6) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்து நடவடிக்கை மேற்கொண்டார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இந்நிலையில் கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட கழக பணிகளை மேற்கொள்ள அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செல்வராஜை நியமித்துள்ளார். அவருக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.