நிறைந்த தரத்துடன் மக்கள் விரும்பும் வகையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் பரணி பவன் சைவ உணவகம்…* வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்!
திருச்சி, டி.வி.எஸ். டோல்கேட்டில் பரணி பவன் சைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விதவிதமான சைவ உணவு வகைகள் நிறைந்த தரத்துடன் மக்கள் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த உணவகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு நேற்று (ஜன.18) திறந்து வைத்தார். விழாவில், பரணி பவன் ஹோட்டல் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகர செயலாளருமான ஆறுமுகபெருமாள் வரவேற்று பேசினார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநகரப் பொருளாளர் ஜானகிராமன், மாநிலத் துணைத் தலைவர்கள் கே.எம்.எஸ்.ஹக்கீம், ரங்கா சீவல் ரங்கநாதன், கல்யாணி கவரிங் உமாநாத், மாநில இணை செயலாளர்கள் டி ராஜாங்கம், எம்.கே.எம்.காதர் மைதீன், எம்.கே.கமலக் கண்ணன், திருப்பதி ஸ்டீல் திருப்பதி, தீபக், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் தில்லை மெடிக்கல் மனோகரன், திருச்சி மத்திய மாவட்டம், மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா, திருச்சி தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதி திமுக செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், பேரமைப்பு செய்தி தொடர்பாளர் திருமாவளவன், கே.எம்.எஸ்.மைதீன், பேரமைப்பு அலுவலக மேலாளர் டோல்கேட் ரமேஷ் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வியாபார பெருமக்கள், தொழிலதிபர்கள் , உறவினர்கள், நண்பர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு தரமான, சுவையான உணவுகள் ஆர்டரின் பெயரிலும் தயாரித்து வழங்கப்படுகிறது. இதேபோல், பரணி பவன் உணவகத்தின் மற்றொரு கிளை திருச்சி, பஞ்சப்பூரிலிருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.