Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியா..?- தவெக மாநில நிர்வாகி அருண்ராஜ் பேட்டி…!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, த.வெ.க.உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதி வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதன்படி, த.வெ.க. நிர்வாகிகள் திருச்சியில் இன்று(09-02-2026) மன்னார்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கட்சியின் மாநில நிர்வாகி அருண் ராஜ் தலைமையில் பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் சம்பத்குமார், அருள் பிரகாசம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில நிர்வாகி அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெரும்பாலான மனுக்கள் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி. பள்ளிக்கூட வசதி கேட்டுள்ளனர். திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதிய திட்டம் குறித்து மனுக்கள் வழங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வருகிறதே என்று கேட்டதற்கு… பெரும்பாலானோர் தங்கள் தொகுதியில் விஜய் நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதுகுறித்து முறைப்படி விஜய் அறிவிப்பார். ஐம்பதாயிரம் நபர்களுக்கு மேல் அதிகமாக கூடும் பொழுது 30 நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், திமுக மாநாடுகளுக்கு உடனடியாக எப்படி அனுமதி கிடைக்கிறது. இது ஜனநாயகமா? என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்