Rock Fort Times
Online News

திருச்சியில் நீண்ட காலமாக மூடிக் கிடக்கும் சிவாஜி சிலை திறக்கப்படுமா?- அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பதில்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதி கட்சியின் தூண் என்று அழைக்கப்படும்  சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மணிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று(19-10-2024)  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்  அந்த மணி மண்டபங்களை பார்வையிட்டு  பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏடி பன்னீர்செல்வம், நடிகர் தியாகராஜ பாகவதர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.  அதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பெரும்பிடுகு முத்தரையர்,  சர். ஏடி பன்னீர்செல்வம் மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மணிமண்டப பணிகள் கிடப்பில்  போடப்பட்ட  நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு  அதற்கான நிதியை ஒதுக்கி 3 மணி மண்டபங்களையும் கட்டி முடித்து ஒரே நாளில் திறந்து வைத்தார் என்றார்.  அப்போது நிருபர்கள், திருச்சியில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக மூடப்பட்டு கிடக்கும் சிவாஜி சிலை திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் அளித்த அமைச்சர், செய்தி துறை மூலம் நிறுவப்படுகிற சிலை மட்டும் எங்களது கவனத்திற்கு வரும்.  சிவாஜி சிலை திறப்பு குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் ராஜாராம், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்