வருகிற சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியா?-* திருச்சி சிட்டி முழுவதும் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் திகு…திகு…!
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அமைத்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தலைவா கர்ணா என்பவர் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அந்த சுவரொட்டியில் ஜூன் 22-ல் பிறந்தநாள் காணும் திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரை வாழ்க பல்லாண்டு என குறிப்பிட்டுள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவர் 234 சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த சுவரொட்டி மூலம் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறாரா? அல்லது ரசிகர் தனது ஆவலை தெரிவித்துள்ளாரா? என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த சுவரொட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே மதுரை மேற்குத் தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.