மக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன்- திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி…!
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான ஆரியம்பட்டி, பழங்காவேரி, காமநாயக்கன்பாளையம், எஸ்.புதுக்கோட்டை, பெட்டவாய்த்தலை , காவல்காரன்பாளையம், சிறுகமணி, பெருகமணி, நங்கவரம், திருப்பராய்த்துறை, கொடியாலம், புலிவலம், அந்தநல்லூர், ஜீயபுரம், பெரிய மற்றும் சின்ன கருப்பூர், மேக்குடி, கடியாக்குறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது வேட்பாளர் கருப்பையா கூறுகையில்,
உங்களுக்காக உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். அந்தநல்லூர் ஒன்றியம் மற்றும் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட
பொதுமக்கள் பயன்பெரும் வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன். இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான பெட்டவாய்த்தலையில் பிரியும்
கட்டளை வாய்க்காலில் கதவணைப் பாலம் கட்டி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தில், திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் பரஞ்ஜோதி, ப.குமார், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் கோப்பு நட்ராஜ், கடிகை ராஜகோபால், சிறுகமணி நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக், முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் திருப்புகழ் செல்லத்துரை, எம்ஜிஆர் அணி மாவட்ட இணை செயலாளர் கே.பி.ராஜா, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சிறுகமணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி ரகுபதி, அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகப் பொருளாளர் பி.எம் கதிர்வேல், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சபாஷ் (எ) ராமச்சந்திரன், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், தே.மு.தி.க.தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திராவிட மணி, சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் ஹரிதாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தலைவர் ரசூல் முகமது மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் நிர்வாகிகள், ஒன்றிய , மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.