Rock Fort Times
Online News

பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்படாதது ஏன்?* தேர்தல் அதிகாரி விளக்கம்!

தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 28) சென்னை, பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்போது வரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் கூறுகையில், “நாளைய விஜய் பிரச்சாரத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், விஜய்க்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் முறைப்படியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் எனில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் காவல்துறை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும். அதன் பின்னரே, பிரச்சாரத்திற்கான அனுமதியை தேர்தல் அதிகாரிகள் வழங்குவார்கள். காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்கள் கேட்டால் அவற்றுக்கு அனுமதி கொடுப்பதில்லை. அரசியல் கட்சிகள் கேட்கும் இடங்களில் எவ்வளவு கூட்டம் வரும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதா உள்ளிட்டவற்றை ஆராய்ந்தே அனுமதி வழங்கப்படுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். பிரச்சாரம் மேற்கொள்வதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும். அனுமதி வழங்க முடியாத இடங்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்