Rock Fort Times
Online News

கொடுத்த பணத்துக்கு வட்டி எங்கே? பள்ளி ஆசிரியருக்கு பிவிசி பைப்பால் அடி – பைனான்சியர் கைது ! திருச்சியில் பரபரப்பு!

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52).  இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 52) என்ற பைனான்ஸிரிடம் ரூ. 3 லட்சம் பணம் கடன் வாங்கி இருந்தார்.இந்த நிலையில் கடந்த மூன்று மாதமாக ராமச்சந்திரன் வட்டி பணம் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன் உறையூர் சாலை ரோட்டில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்திற்கு சென்று சத்தியமூர்த்தியிடம் பணம் தருவது தொடர்பாக பேசி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பைனான்ஸ் அதிபர் சத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆட்கள் பாட்ஷா, ராகேஷ் ஆகியோர் ராமச்சந்திரனை பிவிசி பைப்பால் தாக்கி கடுமையான வார்த்தையால் திட்டி உள்ளார்.இது குறித்து ராமச்சந்திரன் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்ஸ் அதிபர் சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் பாட்ஷா ராகேஷ் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்