நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு?-பா.ஜனதாவுக்கு இனி பிரசாரம் செய்ய மாட்டேன் என மேலிடத்துக்கு பரபரப்பு கடிதம்…!
பாஜகவுக்காக இனி பிரசாரம் செய்யமாட்டேன் என்று நடிகை குஷ்பு, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கடந்த 2019ம் ஆண்டு டெல்லியில் நடந்த விபத்தில் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைகள் எடுத்து வந்தேன். தற்போது தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது. இருப்பினும் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் பாஜக தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த பிரசாரங்களை செய்தேன். தற்போது நிலைமை மோசமாகி விட்டது. ஆகவே, பிரச்சனையில் இருந்து விடுபட்டு தேவையான மருத்துவ சிகிச்சை எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது உயிருக்கு அச்சுறுத்தலான சிகிச்சை முறையல்ல. இது எனது நல்ல எதிர்காலத்துக்கான சிகிச்சை முறை. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.