ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ஓய்வூதிய பலன்களை அறிவித்து என்ன பிரயோஜனம்?- நயினார் நாகேந்திரன் கேள்வி!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்து விட்டு ஆட்சி முடிய போகும் நேரத்தில் அதுவும் அந்த சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தவன் காரணமாக வேறு வழி இன்றி ஓய்வூதிய பலன்களை அறிவித்து உள்ளார், முதல்வர் மு.க. ஸ்டாலின். இதனால் அரசு ஊழியர்களுக்கு என்ன பிரயோஜனம்? அதுவும் எப்போது தருவேன் என்று அரசு சொல்லி இருக்கிறதா..?. இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை . இன்னும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் பிரச்சனை இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?. காங்கிரஸ் கட்சியில் நடப்பது உட்கட்சி பூசல். காங்கிரஸ் வேறு எங்கோ கூட்டணிக்கு செல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி வலுவாக உள்ளது. இன்னும் சில கட்சிகள் வர உள்ளார்கள். அமித்ஷா வந்து சென்ற பிறகுதான் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.