திருச்சி, ஸ்ரீரங்கம், ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 50 ).இவருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உடையவரான இவர் ஸ்ரீரங்கம் யாத்திரிநிவாஸ் அருகில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது, மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.