திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்…!
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று(03-12-2024) நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள்n நகர அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். விழாவில் எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி , மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்று திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 96 மாற்று திறனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்ற காலம் முதல் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள், திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் மாற்று திறனாளிகளுக்காக அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசி குரல் எழுப்பியவர் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். என்றைக்கும் இந்த அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பேசினார். நிகழ்ச்சியில் தனித்துறை ஆட்சியர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி
கி. ஆ.பெ.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமரவேல், மாவட்ட வேலை வாய்ப்பு துணை இயக்குனர் மகாராணி, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, திட்ட அலுவலர் நித்யா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட உதவி செயல் படுத்தும் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
Comments are closed.