Rock Fort Times
Online News

292 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் …

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்