திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: கழகச் செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை, மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தென்னூர் அப்பாஸ், மாவட்ட பாசறை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ரோஜர் ,மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, வக்கீல் சி.பி ரமேஷ், வட்டச் செயலாளர்கள் தில்லை முருகன், கணேசன், ஜெகதீசன் வெல்லமண்டி கன்னியப்பன், சிந்தை ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் , பீமநகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.