Rock Fort Times
Online News

25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்- நிர்மலா சீதாராமன் பெருமிதம்…!

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று(01-02-2026) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்று அம்சங்கள் பின்வருமாறு:-

* காதி, கைத்தறி கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

* தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும். * நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்கப்படும். ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம். தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும். * கடலோர சரக்கு போக்குவரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் புதிய திட்டம். நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

* புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும். * வங்கி துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. * சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகம். புதிய திட்டத்திற்கு ரூ.10,000 கோடி  ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்