Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் நாளை (பிப்.11) குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் வெல் III மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-II ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (10.02.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்   காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படுகின்றன. கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் வெல்- III மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் -II ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லை நகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யக்கொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம்.நகர் மற்றும் திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், விவேகானந்தர் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை (11.02.2026) ஒருநாள் மட்டும் இருக்காது. 12-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்